JEE main மற்றும் NEET தேர்வு எப்போது ?



 

JEE main மற்றும் NEET தேர்வு எப்போது ?






news18 website -ல் JEE main மற்றும் NEET தேர்வு பற்றிய் செய்திகள் வெளியாகி உள்ளது . அவர்கள் கூறியுள்ளது என்னவென்றால் : JEE main 2022 notification ஜனவரி மாதம் வரும் என்றும் , NEET 2022 தேர்வு ஜூன் மாதம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது . அதுமட்டுமல்லாமல் exam pattern கடைசி வருடம் போலவே தான் இருக்கும் என்றும் கூறியுள்ளனர் .




 






" the NTA ( national testing agency ) is expected to conduct the entence exam - NEET 2022 in june while engeenering entrance exam JEE can be expected as soon as january . " அதாவது ஜனவரியில் JEE -க்கு notification வந்துரும் , எப்போப்போ என்னென்ன தேர்வு வரும் எப்போ registration பண்ணணும் இது போன்றவை எல்லாமே ஜனவரி மாதம் JEE 2022-க்கு notofication வந்துரும் NEET 2022 ஜூன் மாதம் நடக்கும் எனவும் கூறியுள்ளனர்






 

" JEE main 2022 as well as neet 2022 likely last year " , அதாவது கடைசி வருடம் போலவே இந்த வருடமும் ஓரே pattern-ல தான் நடக்கும் என கூறியுள்ளனர் . இதில் neet 2022 exam internal choise - உடன் 200 கேள்விகளும் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும் . 

 

 





3 மணி நேரம் தேர்வு நடைபெரும் . 200 கேள்விகளுக்கு 180 பதில்கள் எழுத வேண்டும் . 180 கேள்விகளுக்கு 180 நிமிடங்கள் நேரம் இருக்கும் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் .



TNPSC தேர்வின் முக்கிய அறிவிப்பு







தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணி இடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் TNPSC தேர்வுகளை நடத்தி அந்த பணியிடங்களை நிரப்பி வருகிறது . அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெள்யிட்டுள்ளது .






அதில் பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் . மூன்றுக் கட்டமாக தேர்வு நடத்தப்படும் . மே 23 ஆம் தேதி குரூப் 2 குரூப் 2A தேர்வு நடைபெறும் . இதில் நேர்முக தேர்வு பதவிகளுக்கு 161 இடங்களுக்கும் , நேர்முக தேர்வு அல்லாத பணிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும் .






இந்த தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் . 100 கேள்விகல் மொழிபாடத்திலிருந்தும் , 75 கேள்விகள் பொது அறிவியலும் , 23 கேள்விகள் புறனாய்வும் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் . 90 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் என்று அறுவிக்கப்படுவார்கள் .






கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைப்பெறாததால் அரசு அறிவித்துள்ளபடி பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . குரூப் 2 தேர்வானது முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது .


இலவச மடிக்கணிணி எப்பொழுது கிடைக்கும் என்ற தகவல்






2022 -ல் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச மடிக்கணிணி எப்பொழுது கிடைக்கும் இது குறித்து தமிழ்நாடு அரசு என்ன கூறியிருக்கிறது என்பதை பார்க்கலாம் .







தமிழக அரசு சார்பில் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணிணி வழங்கும் திட்டம் 2011-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வழங்கி வருகிறது . இது வரை 15 லட்சத்துக்கும் மேல் இலவச லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .






கடந்த கல்வி ஆண்டு மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது . இதற்கு முக்கிய காரணம் கொரோனா என்று பள்ளிக்கல்வித் துறை சுட்டிக்காட்டியுள்ளது . மாணவர்களுக்கான இலவச லேப்டாப்களை தயாரித்து வழஙகக்கூடிய நிறுவனங்கள் இந்த ஓப்பந்தத்தை எடுக்க முன்வராததே காரணம் என்ற தகவலும் வெள்யாகி உள்ளது .








. தமழக அரசு லேப்டாப்கள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படுபவை . அதே நேரத்தில் சந்தைக்கு அனுப்பப்படும் லேப்டாப்களின் விலை 30,000-க்கும் அதிகமானவை .




தமிழக அரசு வழங்கக்கூடிய மடிக்கணிணிகளை தயாரிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்த நிலையிலும் அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது . தற்போதைய கொரோனா கலகட்டத்தை பயன்படுத்தி அதிக விலைக் கொண்ட மடிக்கணிணிகளை தயாரிக்கவே நிறுவனங்கள் விரும்புவதே டென்டரில் பங்கேற்க விரும்பாததற்கு முக்கிய காரணம் ஆகும் .











இதன் காரணமாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப்டாப்களை உரிய நேரத்தில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது .





எனினும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது . இனிமேல் இலவச லேப்டாப்கள் எப்பொழுது கிடைக்கும் என்பதை நாம் பொருத்திருந்து பார்போம் .








Post a Comment

0 Comments