பட்டா என்றால் என்ன ? ஏன் சொத்துக்கு பட்டாக்கள் முக்கியமாக இருக்கிறது ?
சொத்துக்களை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரம் இருந்தால் மட்டும் அந்த சொத்து பத்திரமாக இருப்பதாக அர்த்தம் இல்லை . பத்திரம் பெறுவது சொத்து வாங்குவதில் உள்ள முதல் என்பதை நினைவில் கொள்க . அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து அதற்கான பட்டா பெற்றால் அது முழுமையான சொத்தாகும் .
அந்த சொத்துக்கான பட்டாவை யாரிடம் , எங்கே பதிவு பெருவது என்பதை பார்போம் . பட்ட வழங்குவது வருவாய் துறையின் கீழ் உள்ளது . வருவாய் துறையில்தான் பட்டாக்களை பெற வேண்டும் . பட்ட பெறுவதற்கு அந்த பகுதி கிராம நிரவாக அலுவலர் ( VAO ) மனுக்களை வழங்க வேண்டும் . நிங்கள் அளிக்கும் மனு உடன் ஆவணங்களின் நகல்களை அத்துடன் இணைக்க வேண்டும் . மூல ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை .
இந்த மனுவின் மீது தனது அறிக்கை உடன் தாசில்தார் அலுவலகத்துக்கு VAO சென்று சம்மந்தப்பட்ட மண்டல துணை தாசிதாரிடம் அளிப்பார் . அவர் ஆவணங்களை துணை தாசில்தார் , வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து மனுதாரருக்கு பட்டா மற்றும் சிட்டா நகல்களை வழங்குவார் . இந்த படிகள் 15 நாட்களில் பட்ட மாற்றம் நடைபெற வேண்டும் . ஆனால் நடைமுறையில் இவ்வாறு நடப்பதில்லை என்பது வேறு விஷயம் .
ஏன் பட்டா வேண்டும் ? இந்த பட்டா இல்லை என்றால் என்ன ஆகும் ?
ஓருவர் அதிகார பத்திரம் மூலம் ஓரு சொத்தை பலருக்கு விற்கும் காலம் இது . அவ்வாறு சொத்து பெரும் நபர்கள் பதிவு அலுவலகத்துக்கு சென்றால் அதே சொத்தை பலருக்கு பதிவு செய்து தர வாய்ப்புண்டு . இதனால் சொத்துக்கு உண்மையிலேயே உரிமையாளர் யார் என்ற குழப்பம் ஏற்படும் .
ஓரு சொத்தை பதிவு செய்கிற நபர் அதை பட்டாவாக மற்றி கொண்டு விட்டால் அந்த பிரச்சணை ஏற்பட வாய்ப்பு இல்லை . தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏராளமான மணை போட்டு விற்பனை செய்கிறார்கள் .
எடுத்துக்காட்டாக 30 மணைகளை விற்பனை செய்கிறார்கள் என கொள்வோம் . இடங்களை பெறுவோர் பத்திர பதிவு செயது வைத்துக்கொள்வார்கள் . அந்த சொத்துகளுக்கு பட்ட பெறவில்லை என்றால் அந்த 30 மணைகளில் சில மணைகளை பூங்கவுக்கும் சமூதாய கூடங்களுக்கும் வருவாய் துறை ஓதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உண்டு . இதை போன்ற சில பிரச்சணைகளை தவிர்க்க பட்டா அவசியமாகிறது .
உபகரணங்கள் இன்றி கட்டு விரியன் பாம்பை பிடித்த ஆசிரியர்
கேரளாவின் வாவா சுரேஷ் போல சந்திரன் கோவில் அருகே ஆசிரியர் ஓருவர் எந்த உபகரணங்களும் இல்லாமல் கம்புகளின் உதவியை கொண்டே கட்ட விரியன் பாம்பை லாவகமாக பிடித்து வனத்தில் விட்டார் . தென்காசி மாவட்டம் குருவி குளம் அருகே கோபால் நாயக்கர் அரசிணர் மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .
இந்நிலையில் மாணவர்கள் கழிவறைக்கு சென்ற போது குழாய் பகுதிக்குள் பாம்பு இருப்பதாக மாணவர்கள் உடற்கல்வி ஆசிரியர் நேருதாஷ் கெனடி-க்கு தகவல் தெறிவித்தனர் . உடற்கலவி ஆசிரியர் கம்புகளைக் கொண்டு பாம்பை வெளியே வரவைத்து அதை லாவகமாக பிடித்தார் . பின்னர் காட்டுப்பகுதிக்குள் விட்டார் .
பிடிப்பட்ட பாம்பு கட்டவிரியன் ரகத்தை சேர்ந்தவையாகும் . கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குள் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பள்ளி வளாகத்துக்குள் புகுந்த நிலையில் அதனையும் லாவகமாக பிடித்து உடற்கல்வி ஆசிரியர் காட்டு பகுதிக்குள் விட்டார் என்பதும் குறிப்படதக்கது .
பள்ளி வளாகதிற்குள் பாம்பு புகுந்த நிலையில் யாரையும் எதிர் பாக்காமல் உடற்கல்வி ஆசிரியர் செயல்பட்டது வரவேர்பை பெற்றாலும் உரிய உபகபரணஙகள் கொண்டு பாம்புகளை கையால்வதே பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதற்கிடையில் பாம்பு கடித்ததில் சிகிச்சை பெற்று வரும் கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் நலமுடன் குணமடைய பிராத்தனையும் நடைப்பெற்றது .
தென்காசி மாவட்டம் சந்திரன் கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லுர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காளிராஜன் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கரிவனவந்தநல்லூர் இளைஞர்கள் இணைந்து பிராத்தனாயில் ஈடுபட்டனர் .
0 Comments