DMDA , DTCP , PANJAYATH Approvals பற்றிய தகவல்கள்

 

DMDA , DTCP , PANJAYATH Approvals பற்றிய தகவல்கள்






நிலம் வாங்குவதற்கு முன்பு CMDA , DTCP , PANJAYATH Approvals என்கிற அப்ருவல்கள் பற்றி எல்லோரும் தெறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் . நிலம் சம்பந்தமான சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் இந்த blog-ன் Cantact us page-ல் என்னை தொடர்பு கொள்ளுங்கள் .






DMDA , DTCP , PANJAYATH Approvals இந்த மூன்று அப்ரூவல்களும் என்ன ? இதற்கிடையேயான வித்தியாசம் என்னென்ன ? என்பதை பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம் . இனிமேல் நீங்கள் வாங்க போர நிலத்துக்கு எந்த அப்ரூவல் தேவைப்படும் என்பதை பற்றியும் தெறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் தான் அதையும் இனிமேல் பார்க்கலாம் .






CMDA Approvals என்றால் என்ன ?





CMDA Approval-ன் விரிவாக்கம் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ( Chennai , Metropolitan , Develepment , Authority ) அதாவது நீங்கள் வாங்க போர நிலம் ஓரு மெட்ரோ சிட்டிக்கு உட்பட்டு இருந்தால் அதுக்கு CMDA Approval கண்டிப்பாக தேவைப்படும் .




அந்த மெட்ரோ சிட்டி என்றால் ஓவ்வொரு மாநிலத்துக்கும் ஓரு தலைநகரம் இருக்கும் அது தான் மெட்ரோ சிட்டி என்று பெயர் . உதாரணத்துக்கு தமிழ்நாட்டு மாநிலத்தின் தலைநகரமான சென்னை சிட்டிக்கு உட்பட்டு உங்கள் நிலம் வந்தா அதுக்கு CMDA Approval முக்கியமாக தேவைப்படும் .





அப்படி நீங்கள் மெட்ரோ சிட்டிக்கு உட்பட்டு மணையோ அல்லது நிலமோ வாங்குரிங்கள் என்றால் விற்கும் உரிமையாளரிடம் layout வரைபடம் கேளுங்கள் அந்த வரைபடத்தில் CMDA Approval இருக்கிறதா என்று பாருங்கள் . அப்படி இருந்தால் அதில் நம்பர் இருக்கிறதா என்று பாருங்கள் . இந்த இரண்டும் அதில் சரியாக இருக்கிறது என்றால் அந்த நிலத்தை நீங்கள் வாங்குறதில் எந்த பிரச்சணயும் இல்லை என்று அர்தம் .








இந்த CMDA Approval எதற்கு தேவைப்படுகிறது என்றால் , CMDA Approval தேவைப்படுவதற்கான இரண்டு முக்கியமான காரணம் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் வீடு கட்டுரிங்கள் என்றால் அதற்கு அரசாங்கத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் . இரண்டாவது காரணம் இரண்டு கட்டடங்களுக்கிடையேயான இடைவெளி சரியாக இருக்க வேண்டும் இதெல்லாம் இருக்கா இல்லையா என்பதை சரிபார்க்க CMDA Approval தேவைப்படுகிறது .







DTCP approval என்றால் என்ன?






DTCP approval இதற்கு விரிவாக்கம் என்னவென்றால் Directory of Town And Contry Planic நீங்கள் வாங்கக்கூடிய மணை சென்னை மெட்ரோ சிட்டிக்கு வெளியே இருந்தால் அதுக்கு DTCP approval தேவைப்படுகிறது . அப்படி நீங்க வாங்க போர மணைக்கு DTCP approval இருக்கிறது என்றால் அதற்கு ஓரு நம்பர் இருக்கும் அந்த நம்பரை வாங்கி நீங்களே அந்த நிலத்துக்கு DTCP approval இருக்கா இல்லையா என்று உறுதிப்படுத்திக்கொள்ளளாம் .





இப்போ வாங்க போர நிலம் பத்தி ஏக்கர்-க்கு கம்மியா இருந்தால் அது எந்த மாவட்டத்துக்கு உட்பட்டு வருகிறதோ அந்த மாவட்டத்தின் DTCP அலுவலகத்துக்கு போய் அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வகு நல்லது .






அதே போல் நிலம் பத்து ஏக்கர்-க்கு மேலே இருந்தால் DTCP தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு DTCP approval வாங்கிவிடனும் . DTCP approval பெறுவதால் என்ன பயன் என்றால் நிலம் விற்பதற்கு முன்பு DTCP approval வாங்குவார்கள் . அந்த அப்ரூவல்லில் என்னேன்ன இடம்பெரும் என்றால் நல்ல அகலமான சாலை , ஓரு பூங்கா , மின்சார வசதி , தண்ணிர் வசதி , மின் விளக்கு வசதி மற்றும் அத்தியாவசிய தேவைகள் என்னனவோ அதெல்லாம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திவிட்டுதான் அரசாங்கம் DTCP approval கொடுக்கும் .





பஞ்சாயத்து approval என்றால் என்ன ?






பஞ்சாயத்து approval என்பது நகரப்பகுதிக்கு அப்பார்பட்டு வரக்கூடிய அனைத்து நிலங்களும் அதாவது கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டு வரக்கூடிய அனைத்து நிலங்களுக்கும் பஞ்சாயத்து approval தேவைப்படுகிறது .





இந்த அப்ரூவல் எதற்க்காக கொடுக்கப்பட்டுள்ளது என்றால் , கிராமப்பகுதிகளை முன்னேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது . முன்னாடு இது பஞ்சாயத்து approval ஆக மட்டும் இருந்தது . ஆனால் தற்பெோது பஞ்சாயத்து approval உடன் DTCP அப்ரூவல்லும் இதற்கு வாங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது .








இதற்கு முன்பு எவ்வாறு இருந்த்து என்றால் ஓரு நிலத்துக்கு பட்டா இருந்தாலே அந்த பஞ்சாயத்துல approval வாங்கி வீடு கட்டலாம் இல்லை என்றால் பழைய வீட்டை புதுபித்துக்கொள்ளலாம் . அவ்வாறு பண்ணும்பொழுது பஞ்சாயத்துல ஓரு அப்ரூவல் தருவாங்க அதையும் இரண்டு வருட கால அவகாசத்தோட தருவாங்க . கொடுக்கப்பட்ட அவகாசம் முடிந்துவிட்டது என்றால் மீண்டும் வாங்கிக்கொள்ளலாம் . ஆனால் இன்று கண்டிப்பாக DTCP approval வாங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றாம் உத்தரவுவிட்டுள்ளது .










உங்களுக்கு நிலங்கள் தொடர்பான எந்த சந்தேகங்கள் இருந்தாலும் இந்த blog-ன் Cantact us page-ல் எங்களை தாராலமாக தொடர்பு கொள்ளலாம் .



Post a Comment

0 Comments