மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி , ஊராட்சி ஓன்றியம் , மாவட்ட ஊராட்சி என்றால் என்ன ???

 

மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி , ஊராட்சி ஓன்றியம் , மாவட்ட ஊராட்சி என்றால் என்ன  என்ன  ???





தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இதன் அடிப்படையில்தான் மாநகராட்சி , நகராட்சி , பேருராட்சி , ஊராட்சி அப்படி என்று ஓரு ஊரை பிறிக்கின்றனர் , இதை எதன் அடிப்படையில் பிறிக்கிறார்கள் என்றால் ஓரு ஊரோட மக்கள் தொகை மற்றும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் தான் பிறிக்கின்றானர் . இந்த தமிழக உள்ளாட்சி அமைப்புகள் நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி என்று ஆறு வகையாக பிறிக்கின்றானர் . அவையாவன :






மாநகராட்சி





முதலாவது மாநகராட்சி இவை ஓரு ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாயின் அடிப்படையில்தான் ஓரு ஊரை மாநகராட்சி என்று குறிக்கின்றனர் . இந்த மாநகராட்சிகளுக்கு ஏற்கனவே பெரிய பதவியில் இருக்கும் அதிகாரிகளையோ அல்லது இதற்கு தகுதி உடைய அதிகாரிகளையோ மாநகராட்சி ஆணையர்களாக தேர்ந்தெடுப்பார்கள் .







ஓரு மாநகராட்சி என்று எடுத்துக்கொண்டால் அதற்கு மேயர் இருப்பார் , மாமன்ற துணைத் தலைவர் இருப்பார் , மேயர் மற்றும் மாமன்ற துணைத்தலைவர் , மாநகராட்சி மன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மாணங்களிலின் படி மாநகராட்சி ஆணையர் மற்றும் அவருக்கு கீழே உள்ள ஊழியர்கள் இந்த வேலையை செய்து முடிப்பார்கள்






தற்போது வரைக்கும் தமிழ்நாட்டில் 15 மாநகராட்சி இருக்கு அவை என்னென்னவென்றால் சென்னை , கோயம்புத்துர் , மதுரை , திருச்சி , சேலம் , திருப்பூர் , ஈரோடு , நெல்லை , வேலுர் , தூத்துக்குடி , திண்டுக்கல் , தஞ்சாவூர் , நாகர்கோவில் , ஓசூர் , ஆவடி ஆகும் . அதில் ஓசூர் , நாகர்கோவில் , ஆவடி ஆகிய மூன்றையும் சமிபத்தில் தான் மாநகராட்சியாக அறிவித்துள்ளனர் .








நகராட்சி






இரண்டாவது நகராட்சி . மாநகராட்சியை அடுத்த நிலையில் கொண்டிருப்பது நகராட்சி ஆகும் . தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கிறது . இதில் அம்பாசமூத்திரம் , கரூர் , கோவில்பட்டி , பொள்ளாட்சி , செங்கோட்டை , சிலம்பட்டி , கும்பகோணம் அப்படி என்று 148 நகராட்சிகள் இருக்கிறது . இதெல்லாம் முனிஸ்பால்டி என்று கூறுவர் .






இந்த நகராட்சிகள் பஸ்ட் கிரேட் , சகெண்ட் கிரேட் , செலக்சஷன் கிரேட் , ஸபெசல் கிரேட் , அப்படி என்று தரம் பிரித்து வைத்திருப்பார்கள் . நகராட்சி மன்ற தலைவர் மன்ற கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மாணங்களின் படி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு கீழ் உள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துவர் . இந்த நகராட்சி எல்லாம் தமிழ்நாடு நகராட்சி ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகிறது .






பேரூராட்சி






மற்ற நாடுகளுக்கும் மாநகராட்சி , நகராட்சி அப்படி என்று இருக்கிறது . ஆனால் பேருராட்சி அப்படி என்று இல்லை . இந்தியாவில்தான் இதை முதன்முதலாக கொண்டு வந்தனர் . இந்த பேரூராட்சி தலைவர் மக்கள் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் .





பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மாணங்களின்படி செயல் அலுவலர் அந்த பணிகளை செய்து முடிப்பர் . தமிழ்நாட்டில் மொத்தம் 561 பேரூராட்சி இருக்கிறது . இந்த எல்லா பேரூராட்சிகளுக்கும் ஆணையர் அலுவலகம் இருக்கும் அந்த ஆணையர் அலுவலகத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது . சோழவந்தான் , வாடிப்பேட்டை , திருப்புவனம் இதெல்லாம் பேரூராட்சிக்கான எடுத்துக்காட்டு .





ஊராட்சி






தமிழ்நாட்டில் 500 பேருக்கும் மேல இருக்கிற எல்லா ஊரையும் ஊராட்சி என்று அழைப்பர் . ஊராட்சி மன்ற தலைவர் , துணைத்தலைவர் இவர்கலெல்லாம் மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர் .






. ஊராட்சியின் எல்லா பொருப்புகளையும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எலுத்தர் பார்துக்கொள்வார்கள் . தமிழ்நாட்டில் மொத்தம் 12,618 ஊராட்சிகள் இருக்கிறது .





ஊராட்சி ஓன்றியம்






ஊராட்சி ஓன்றியம் அப்படி என்றால் ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகள் ஓன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஓன்றியம் அப்படி என்று கூறுவர் .




மாவட்ட ஊராட்சி




மாவட்ட ஊராட்சி அப்படி என்றால் சென்னையை தவிர ஓவ்வொரு மாவட்டத்துக்கும் ஓரு குழு அமைப்பார்கள் . 50,000 மக்கள் தொகைக்கு ஓருவர் என்ற அடிப்படையில் ஓருவர் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவர் .






இவரின் வேலை கிராம ஊராட்சி , ஊராட்சி ஓன்றியம் கூறும் திட்டங்களை ஆலோசிப்பது மற்றும் சாலை வசதி செய்து கொடுப்பது ஆகும் .








Post a Comment

0 Comments