ஐபிஎல் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது .
ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் 15-ஆவது சீசன் மார்ச் 26 முதல் தொடங்கி மே 29 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது . அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் . A மற்றும் B என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு A பிரிவில் முமபை , கொல்கத்தா , டெல்லி , ராஜஸ்தான் , லக்னோ அணிகளும் , B பிரிவில் சென்னை , ஹைதராபத் , பெங்களூரு , பஜ்சாப் , குஜராத் அணிகளும் விளையாடும் என அறுவித்துள்ளது .
சென்னை அணி தனது பிரிவில் உள்ள அணிகள் மற்றும் A பிரிவில் உள்ள மும்பை அணியுடன் தலா 2 போட்டிகளில் விளையாடும் எனவும் மற்ற அணிகளுடன் ஓரு போட்டியில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இதே போல மற்ற அணிகளுக்கும் போட்டிகள் திட்டமிட்டப்பட்டுள்ள நிலையில் விரைவில் அட்டவணை வெளியாகும் எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் க்கு வாய்ப்பு
15 ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் மற்றும் விதிமுறைகளை ஐபில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது . இந்த ஆண்டுக்கான ஐபில் தொடர் மார்ச் 26 முதல் தொடங்கி மே 29 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது .
மொத்தம் பத்து ஆணிகள் பங்கேற்க இருப்பதால் இந்த முறை குருப் சிஸ்டம் கொண்டு வந்துள்ளது . அதன்படி A பிரிவில் முமபை , கொல்கத்தா , டெல்லி , ராஜஸ்தான் , லக்னோ அணிகள் மோதுகின்றன . B பிரிவில் சென்னை , ஹைதராபத் , பெங்களூரு , பஜ்சாப் , குஜராத் அணிகள் மோதுகின்றன .
இந்த குரூப் பிரிவில் csk- க்கு பெரும் ஆதாயம் இருக்கிறது . கடந்த சீசன்களில் பலவீனமாகவும் அதிக தோல்விகளை சந்தித்து வந்த அணிகளான , ஹைதராபத் , பஜ்சாப் மற்றும் RCB அணிகள் இடம்பெற்றிருக்கின்றன .
குஜராத் இந்த ஆண்டு தான் வந்துள்ளது என்பதால் அதன் நிலைமையை பற்றி சரியாக தெறியவில்லை . எனினும் இந்த நான்கு அணிகளின் வீரர்கள் csk -க்கு சவால்விடும் வகையில் இல்லை என்பதே சாதகமான ஓன்றுதான் . எனவே இந்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது .
பேட்மின்டன் ஆசியா டீம் ஹாங்க்காங்கை வீழ்த்தியது இந்தியா
மலேசியாவில் நடக்கும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் , இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின . இந்தப் போட்டியில் இந்தியா 3-2 என்ற புள்ளியில் ஹாங்காங்கை தோற்கடித்தது .
லக்க்ஷயா சென் , ஹாங்காங்கின் லீ யூ மோதிய ஆட்டத்தில் சென் 21-19 , 21-10 செட்களில் வென்றானர் .
இந்தியாவின் மன்ஜித் சிங் , திங்கு சிங் ஜோடி , ஹாங்காங்கின் லாஹிம் , லீ ஹெய் ஜோடியிடம் 20-22 , 15-21 க்கு 18-21 என்ற செட்களில் தோல்வியடைந்தது .
ஹாங்காங்கின் சின் சாக் , இந்தியாவின் கிரன் ஜார்ஜை 21-13 , 17-21 மற்றும் 21-9 என்ற செட்களில் வீழ்த்தியுள்ளார் .
இந்தியாவின் ஹரிஹரன் அம்சல்கருணன் , ரூபன்குமார் ஜோடி 21-17 மற்றும் 21-16 என்ற செட்களில் வென்றது .
இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் , ஹாங்காங்கின் ஜேசன் குணாவன் ஜோடியை 21-14 , 17-21 மற்றும் 21-11 என்ற செட்களில் வென்றனர் .
இதனால் இந்தியா 3-2 என்ற புள்ளிகளில் ஹாங்காங்கை வென்றது .
அகடோபர் 23-ம் தேதி இந்தியா பாக்கிஸ்தான் மோதல்
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர்,நவம்பர் மாதங்களில்
ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச
கிரிக்கெட் கவுன்சில்( ஐ.சி.சி ) நேற்று வெளியிட்டது, இதன்படி இந்த உலக கோப்பை திருவிழ
அக்டோபர் 16-ந் தேதி தொடங்கி நவம்பர் 13-ந் தேதி வரை அங்குள்ள 7 நகரங்களில்
நடக்கிறது. முதல் சுற்றில் இலங்கை, நமிபியா, வெஸ்இண்டிஸ், சுவிட்சர்லாந்து மற்றும் 4
தகுதி சிற்று அணிகள் ஆடுகின்றன.

இவை இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும்,
இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 சுற்றுக்குள்
நுழையும். சூப்பர்-12 சுற்றில் குரூப் 1-ல் இங்கிலாந்து , நியூசிலாந்து, நடப்பு சாம்பியன்
ஆஸ்திரேலியா , ஆப்கானிஸ்தான் மற்றும் இரு முதல் சுற்று அணிகள் , குருப்2-ல் இந்தியா ,
பாகிஸ்தான் , தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம் ஆகியவற்றுடன் முதல் சுற்று அணிகளும்
இடம்பெறும். சூப்பர்12 சுற்றின் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா ,
நயூசிலாந்தை அக்டோபர் 22-ந் தேதி சிட்னியில் எதிர்கொள்கிறது.
பரம எதிரிகளான
இந்தியாவும், பாகிஸ்தானும் அக்டோபர் 23-ந் தேதி உலகின் மிகப்பெரிய மைதானங்களில்
ஓன்றான மெல்போர்களில் பல பரீட்சை நடத்துகின்றன. இதே மைதானத்தில் தான் இறுதி
போட்டியும் அரங்கேறுகிறது. இந்திய அணி மற்ற ஆட்டங்களில் அக்.27-ல் முதல் சுற்று
அணிகளையும் அக்.30-ல் தென் ஆப்பிரிக்காவையும், நவ.2-ல் வங்காளதேசத்தையும், நவ.6-ல்
மற்ற சுற்று அணிகளையும் சந்திக்கிறது. இந்த உலக கோப்பை தொடர் 2020-ம் ஆண்டிலயே
ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்தது. அந்த சமயத்தில் கொரோனா பரவல் உச்சத்தில்
இருந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது
0 Comments