அம்மா ஆனதால் படத்திலிருந்து விலகினார் பிரியங்கா சோப்ரா

 அம்மா ஆனதால் படத்திலிருந்து விலகினார் பிரியங்கா சோப்ரா  


கேத்ரினா கைப் , அலியா பட் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா சோப்ரா இந்தியாவில் நடிக்க இருந்த படம் ஜு லே ஜரா . இது 3 தோழிகளைப் பற்றிய படம் . இந்க படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஓப்பந்தமானார் .









ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது . இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் பிரியங்கா சோப்ரா , நிக் ஜோனஸ் தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டனர் .




குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதால் , சில வெளிநாட்டு படங்கள் , வெப் தொடர்களிலிருந்து பிரியங்கா விலகி வருகிறார் , இந்தியாவில் அவர் ஜி லே ஜரா இந்தி படத்தில் மட்டுமே ஓப்புக்கொண்டிருந்தார் . இப்போது அந்த படத்திலிருந்தும் பிரியங்கா சோப்ரா விலகியுள்ளார் .

தென்னிந்திய சினிமாவை பாலிவுட் கெடுத்து விடக்கூடாது-கங்கனா ரனவத் கவலை



தென்னிந்திய ஹீரோக்கள் இந்திய கலாச்சாரத்கை மதிக்கிறவர்கள் அவரகளை பாலிவுட் கெடுத்துவிடக்கூடாது என்று நடிகை கங்கனா ரனாவத் கவலையுடன் தெரிவித்துள்ளார் . பாகுபலி , கே.ஜி,எப் , புஷ்பா படம் மூலம் தென்னிந்திய நடிகர்கள் , பாலிவுட்டிலே பலமாக களம் இறங்கி வருகிறர்கள் .



கே.ஜி.எப் , மற்றும் புஷ்பா படங்களின் இரண்டாம் பாகம் இந்தியிலும் வெளியாவது குறித்த செய்திகளும் வெளியானது . இந்த செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ள நடிகை கங்கனா ரனவத் இது குறித்து கூறியிருப்பதாவது :தென்னிந்திய ஹீரோக்களும் , அவர்களின் படங்களின் கருவும் ஏன் இவ்வளவு வலுவானதாக இருக்கிறது தெரியுமா , அவர்கள் இ்ந்திய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூண்றியவர்கள் . 


அவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் உறவுகளை நேசிக்கிறார்கள் . அவர்கள் மேற்கத்திய மயமாக இருக்கவில்லை . அவர்களின் தொழில் முறை மற்றும் ஆர்வம் இணையற்றது . பாலிவுட் அவர்களை கெடுப்பதற்கு அனுமதிக்க கூடாது . இவ்வாறு கங்கனா கூறியுள்ளார் . 

150 கோடி செலவான நிலையில்

பாகுபலி வெப்சீரீஸ் கைவிடப்பட்டது

 



ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் , அனுஸ்கா , தமன்னா , சத்யராஜ் , ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்த படம் பாகுபலி . இதன் இரண்டாம் பாகமும் வெளியானது . இந்த இரண்டு பாகங்களாயும் கொண்டு வெப்சீரிஸ் ஓன்றை இதே கதையில் தயாரிக்க நெட்பிளிக்ஸ் ௐடிடி தளம் முடிவு செய்தது . 


 

 


இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வந்தது . முதல் சீசனுக்காக 150 கோடியும் செலவானது . இதில் பிரபல நடிகர் , நடிகைகளை நடிக்க வைக்கவும் ஓப்பந்தம் நடந்து வந்தது . இந்நிலையில் திடீரென பாகுபலி வெப்சீரிஸ் கைவிடப்படுவதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது . 

 



. குணால் தேஸ்முக் , ரிபு தாஸ்குப்தா ஆகியோர் இயக்கத்தில் இந்த வெப்சீரிஸ் தயாரிப்பதற்கான முதல் கட்ட பணிகள் கடந்த ஆண்டு ஜூலை-யில் தொடங்கியது . படப்பிடிப்புக்கு முன்பான பணிகள் நெட்பிளிக்ஸ் நினைத்தது போல் வரவில்லை . தயாரிப்பு பணியிலும் இயக்குநர்களுடன் வேறுபட்ட கருத்து இருந்ததாக கூறப்படுகிறது . இதாயடுத்து வெப்சீரிஸ் கைவிடப்படுகிறது .



 

இந்தி பட டைரக்டர் புகார் "கூகுள்" சுந்தர் பிச்சை மீது வழக்கு

யூடிப்பில் இந்தி படம் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவன அதிபர் சுந்தர் பிச்சை மீது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மும்பை போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர் . பாலிவுட் சினமா இயக்குனரும் , தயாரிப்பாலருமான சுனில் தர்சன் தயாரித்து இயங்கியிருந்த "ஏக் ஹசீனா தீ ஏக் திவானா தா " என்ற இந்தி படம் யூடியூப் தளத்தில் வெளியானது . 


 
 
 
அதிர்சியடைந்த சுனல் தர்ஷன் , என்னுடைய சம்மதம் இன்றி திரைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன ஊழியர் ஐந்து பேர் மீது காப்புரிமை விதிமீறல் புகார் அளித்தார் . அந்த புகாரை அடுத்து மும்பை போலிசார் மும்பை போலிசார் தற்போது வழக்கி பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர் .


 




இது குறித்து மும்பை போலிசார் கூறுகையில் , " பதிப்புரிமை மீறல் வழக்கில் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் நான்கு நிர்வாகிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது . இந்த வழக்கில் யூடியூப் நிர்வாக இயக்குனர் கதவும் ஆனந்த் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . 

 

 


திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் , நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு 156(3) இன் கீழ் மாஜிஸ்திரேட்ல உத்தரவை தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது . " என்றனர் .






Post a Comment

0 Comments